குஜராத் மாநிலத்தில் வருகிற 21-ம் தேதி தொடங்குகின்றது சையது முஸ்தாக் அணிக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி . இந்த போட்டி வருகின்ற மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழக அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் தமிழக அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.