சம வேலை சம ஊதியம் , சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை, நுங்கம்பாக்கம், டிபிஐ அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசியரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பகுதிநேர ஆசிர்யர்களின் தொகுப்பூதியத்தை 10 ஆயிரத்தில் இருந்து 2500 ரூபாய் வரை உயர்த்தி 12500 ரூபாய் வழங்கப்படும், […]
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை செய்து வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்றும், வேலைக்கேற்ற சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் நேற்று தெரிவித்த […]
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி என TET ஆசிரியர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. TET ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டி 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று மதியம் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அமைச்சருடன் மேலும் 2 சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் […]