பத்மாவதி படத்தை பெருமளவில் ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை நாங்கள் வெளியிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்மாவதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து தருவோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.