சென்னையில் தாம்பரம் அடுத்து பம்மல் நந்தனாா் தெருவைச் சோ்ந்த தாமோதரன் என்பவர் ஜவுளி கடை வியாபாரத்தில் நஷ்டப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவி தீபா, தாய் சரஸ்வதி மட்டுமின்றி ரோஷன், மீனாட்சி எனும் இரு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து விட்டு, பின்னர் மாமனாருக்கு தகவல் அளித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் தாமோதரன் […]