வாட் வரி உள்ளிட்ட அனைத்துக்கும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துகிறார் பிரதமர் என ராகுல்காந்தி ட்வீட். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று, தமிழகம் தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் […]
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில், வருமான வரி, குடிநீர் இணைப்பு, வீட்டு வசதி மற்றும் டிஜிட்டல் கரன்சி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதில், கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு 15% ஆக குறைக்கப்படும் என […]
கொரோனா அச்சறுத்தல் மத்தியில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்தில் வந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதனிடையே பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் 69 சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று பெட்ரோல் மீதான வரியை ரூ.10, டீசல் மீதான வரி ரூ.13 என உயர்ந்துள்ளது. இதன் மூலம் […]
வரி என்பது, அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபரிடம் இருந்தோ பெறும் நிதி அறவீடு தான் வரி என்று அழைக்கிறோம். வரியை நாம் மறைமுக வரி மற்றும் நேரடி வரி என இரண்டு வகையாக பிரிக்கலாம். முற்காலத்தில், வரியை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்காலத்தில் நாம் வரியை பணமாக தான் செலுத்தி வருகிறோம். வரியை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் […]
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனமான பொருட்களுக்கு செல்போன்களின் சுங்கவரி (customs duty ) 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் கலர் டிவி மற்றும் மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாதனங்களின் சுங்கவரி 10% இருந்து 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.