தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களை சந்தித்துள்ளன. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு […]