New tax rules: வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது. 2024-25 புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கியுள்ள நிலையில், இந்திய வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரி திட்டமிடலை எளிதாகுவதற்கும், வரி செலுத்துபவர்களுக்கு சலுகைகளை அளிப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி முறை (New […]
காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என 25 லட்சம் வாகனங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 […]
மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி, முக்கிய திட்டங்களுக்கு செலவிடுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு 14 தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.10.21 லட்சம் கோடியை விடுவிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான வரி ரூ.72,961.21 கோடியை நவம்பர் 10-ஆம் […]
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவிப்பு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு […]
உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு. உயர்தர மதுபான விடுதிகளுக்கு வணிக வரித்துறை விதிக்கும் வரியை ரத்து செய்யக்கோரி சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22-ஆம் ஆண்டிற்கான வணிக வரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,”எனது விலைப் பட்டியல் எனது உரிமை” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மக்கள் தாங்கள் பெறும் பொருளுக்கான விலைபட்டியலை கேட்டுப்பெற “எனது விலைப்பட்டியல் […]
அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம்,கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.அதே சமயம்,சில மாநிலங்களில் சமையல் எரிவாய் சிலிண்டர் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் வரி விதிக்க விரும்பவில்லை எனவும்,மாறாக எரிவாயு மீதான வரியை குறைத்துள்ளதாகவும்,மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மேலும்,மாநிலத்தை விட மத்திய அரசு அதிக வரி விதிக்கிறது. எனவே,மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும் எனவும்,இதனை மத்திய அரசு […]
தமிழகத்தில் மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் உள்ள சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 – 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் […]
மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகை குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த பலர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார். பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் பட்ஜெட் […]
மகாராஷ்டிரா அரசு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரியை 50% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படக்கூடிய ஸ்காட்ச் விஸ்கியின் விலை மற்ற மாநிலங்களின் விலைக்கு இணையாக கொண்டு வருவதற்காக அதன் மீதான கலால் வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலால் வரி 300 சதவீதத்திலிருந்து உற்பத்தி செலவில் 150 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 100 […]
பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, 20 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வணிக வரித்துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வரி செலுத்துவதற்கான போலி பட்டியல் தயாரிப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய […]
சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்பார்களா? தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த நிலையில் நுழைவு வரியிலிருந்து விலக்கு கூறியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரத்து வழக்கை, 2018-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையிலும், வரியை வசூலிக்காமல் அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். […]
வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்;ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை பற்றி விவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதற்குமுன் 2001ல் அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து,செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: “வரியே […]
நடிகர் தனுஷ் 48 மணி நேரத்திற்குள் தனது சொகுசு காருக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். […]
நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 […]
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு […]
டிரம்ப் தனது வணிக நிறுவனங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை டைம்ஸ் குற்றச்சாட்டு. டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை. கடந்த 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் $ 750 செலுத்தி உள்ளார். டிரம்ப் தனது […]
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தாமதமாக செலுத்துவதற்கான வட்டி செப்டம்பர் 1ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) முடிவு செய்துள்ளது. அதாவது, கடந்த 2017-ஆம் ஆண்டு (ஜிஎஸ்டி) வரி பிடிப்பு அமலுக்கு வந்த பிறகு, பலர் ஜிஎஸ்டி வரியை தாமதமாக செலுத்தியுள்ளனர். அப்படி தாமதமாக செலுத்தப்பட்ட ஜிஎஸ்டிக்கு வரவேண்டிய வட்டி நிலுவை தொகை ரூ.40,000 கோடியை மீட்டெடுப்பதற்கான உத்தரவு குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய […]
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தி அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் பிரிவு 33-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. வரி உயர்வை எதிர்த்து பாமக நிர்வாகி தேவமணி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மேலும் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தொழில் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கை ஜூன் இறுதிக்குள் தாக்கல் செய்வது என்பது மிகவும் கடினம் மற்றும் இயலாத ஒன்று. எனவே, தொழில் நிறுவனங்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவா்கள் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதலாக 3 மாதங்கள், அதாவது செப்டம்பா் மாத […]