வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் (2017-2021) சீனப் பொருட்களுக்கு வரி விதித்து வர்த்தகப் போரை தொடங்கினார். அதனை தொடர்ந்து, 2025 ஏப்ரல் முதல், ட்ரம்ப் “பரஸ்பர வரி” (Reciprocal Tariff) கொள்கையை அறிவித்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். முதலில் 84%, […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் […]
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதனை கணக்கிட்டு அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]