இன்று தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 1037வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலில் வருடாவருடம் ஐப்பசி மாதம் மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய தினத்தை கொண்டாடும் வகையில் சதய விழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 2 வருடமாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒருநாள் மட்டும் சதய விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த வருடம் வழக்கம் போல பிரமாண்டமாக 2 நாள் […]