பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக […]