தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கொரோனாவால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு (45) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25-ம் தேதி முதல் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார். […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை […]