தஞ்சாவூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டு அதில் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு கடைகள் வைத்து, தொழில் புரியும் பலரும் இருக்கின்றனர். அந்த நிலையில் வட மாநிலத்தவர்கள் அவர்களது கடைகளை பூட்டி சென்ற பிறகு, இரவோடு இரவாக சில நபர்கள் பூட்டுக்கு மேல் பூட்டுப் போட்டு ,அதில் […]