திமுக அரசு தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டான் நிலைநாட்டி இருக்கிறார் என்று வைகோ பாராட்டு. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிந்தன. அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ […]