திடீரென அவள் என்னை பதற்றத்துடன் எழுப்பினாள். “அப்பா.. யாரோ இந்த நேரத்துல போன் பண்றாங்க… என்னன்னு கேளுங்கப்பா…” தூக்க கலக்கம் முழுவதும் நீங்காமல்..”ஏய்! யாரு என்னன்னு நீ கேட்டுத் தொலைக்க வேண்டியது தான? இப்படியா சாமத்துல எழுப்புவ.?” “நீங்க என்ன ஏதுன்னு கேளுங்கப்பா… எனக்கு பதட்டமா இருக்குல்ல…” என சொல்லியபடி செல்போனை அவள் என்னிடம் நீட்டினாள். எனக்கும் அவளது பதட்டம் கொஞ்சம் தொற்றிக் கொண்டது. அவள் பதற்றம் அடைவதும் சரிதான்! ஏதாவது கெட்ட செய்தி என்றால் தான் […]