கொற்கையில் ஆழ்கடல் ஆய்வின் முதற்கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்ச அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொல்லியல் துறை சார்ந்த முக்கிய தகவலை குறித்து பேசினார். அதாவது, முதல்வரின் உரையில், சங்க கால தமிழர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த நகர பண்பாடு பெற்றிருந்தது கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் […]
நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களுடன் தமிழர்களும் என் சகோதர சகோதரிகள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட். நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் […]
இன்று அதிகாலை ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 தமிழ் பக்தர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 குடும்பத்திற்கு தலா 1 […]
மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்க வில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 70_தாவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது அந்த கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எந்த முயற்சி பற்றி யோசிக்க கூட […]