தனியார் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதமற்ற உறுதிமொழிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என பாமக தலைவர் ட்வீட். தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவில், ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகள் […]
மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் முதலமைச்சர் கோரிக்கையினால் மீட்பு. தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மீட்டு தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள். தமிழகள் 13 பேர் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளனர். தாய்லாந்துக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்றிரவு 8 மணிக்கு […]
முள்ளிவாய்க்கால் தூண் இடிக்கப்பட்டதுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்களை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் தூண் புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முள்ளிவாய்க்கால் […]
தமிழர்கள் தான் தமிழ் புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த சித்திரை புத்தாண்டை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மற்றும் பல நாடுகளிலும் கொண்டாடுகின்றனர். இவர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்த புத்தாண்டை, தமிழர் முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும்செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு […]
நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்கள் பாலியில் தொல்லை கொடுக்கிறார்கள், அதற்க்கான ஆதாரங்களை வெளியீட்டு கதிகலங்க வைத்தார். இதனிடையே தேசிய மனித உரிமை ஆணையம் கூட இதை பற்றி விளக்கம்தருமாறு தெலுங்கு திரையுலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் நேரலை கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி தமிழ் மக்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், ஹாட்ஸ் ஆப் டு தமிழ் மக்கள் , அவர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் மரியாதை, எந்த […]