ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் வழங்குவது குறித்து தமிழக அரசுடன் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிமெண்ட்,ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனையடுத்து,கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு,கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,பேச்சுவாரத்தை நடத்தினார். இந்நிலையில்,விலையேற்றம் குறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகையில்:”கொரோனா இரண்டாவது அலையால் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழப்பை […]
சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியது. இன்று காலை முதல் சட்டப்பேரவையில் விறுப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், முறையாக திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் பொருளாதாரம் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் […]
தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது .மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு , எந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று […]
இன்றைய சட்டசபையில் பட்டாசு தொழில் பாதிப்பு குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய அமைச்சர் பெஞ்சமின், பட்டாசு தொழிலாளர்களின் நலனை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். பட்டாசு தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு, அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை அறிவித்தார். அதன்படி, 5 மாவட்டங்களில்ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூரில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கப்படுவதாகவும், 99 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட கஜா புயல் குறித்த விவாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்பொழுது, கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயாக நிவாரண நிதியை உயர்த்தி தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கஜா புயல் […]