தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உள்ளது. இதுபோன்று இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 34,17,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், குறிப்பாக இன்று இறந்தும் எதும் பதிவாகவில்லை என்றும் […]
கொரோனா பரவல் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், கவனம் தேவை என கூறியுள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த சில வாரங்கள் […]
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு. செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து முதலாமாண்டு வகுப்புக்கு மாணவர்கள் வந்திருந்த நிலையில், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் கடந்த 3ம் தேதி 7 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின் நேற்று மேலும் 18 பேருக்கு […]
சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாகவே படிப்பிடிப்பாக மாணவர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை […]
சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு. சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மீதம் 109 பேரில் ஒருசிலருக்கு இனைநோய் பிரச்சனைகள் உள்ளன என்றும் கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
தமிழக்தில் கொரோனாவை உறுதி செய்யும் ஆர்டி-பிசிஆர் ( RT – PCR) பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனை கட்டணம் குறைப்பு: அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ.400லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.700லிருந்து ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதில், அங்கு தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆயினும் மக்கள் பலர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டது. அங்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் […]