தமிழக பாஜக தலைவர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து உள்ளது.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை சற்று பரிதாபமாகதான் உள்ளது.தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.ஆனால் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது.எனவே தோல்விக்கு காரணம் கேட்டு பாஜக மேலிடமும் தமிழக பாஜ தலைவரை மாற்றவும் முடிவு செய்தது […]