சென்னை : தமிழகத்தில் ஜூன் 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி, நாளை மறுநாள் ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாள்கள் குறித்தும், எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் […]
மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 01_ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட சபை கூட்டம் பிப்ரவரி 08_ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழக நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.மேலும் தமிழக முதல்வர் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளிட்டார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் பிப் 11ஆம் தேதி முதல் வரை […]