சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேபோல், தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டையில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வாகனங்கள் நிற்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. என காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பபை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றம் இந்தியாவின் […]
இந்திய நாட்டில் காமராஜரை போன்று ஒரு சிலரை தவிர மற்ற அரசியல்வாதிகள் சொகுசு வீடு,சொகுசு கார்,ஒன்றிற்க்கு பல மனைவிகள் என பகட்டாய் வாழும் இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சிபிஐ கட்சியின் மூத்த மற்றும் முன்னால் தலைவர் நல்லக்கண்ணு மிகவும் எளிமையானவர் என பெயர் பெற்றவராவார்.இவர் கட்சி மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் அரசு பேருந்திலே பயணம் செய்யும் ஒரே அரசியல் தலைவர் என்றும் கூறலாம் அந்த அளவிற்க்கு எளிமையானவர்.இவர் தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். […]
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. அதில் மாநிலத்தை ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜக, பாமக, தேமுதிக இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல திமுகவும், தேசிய கட்சி காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் […]
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய சரக்கு பெட்டக முனையம் உதவும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தக்க்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம் புதிதாக கட்டப்படுள்ளது. இங்கிருந்து புதிய சரக்கு கப்பல் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டெல்லியில் இருந்து மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். […]
4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில்,கரூர் மாவட்டம் நெரூர் முதல், திருச்சி மாவட்டம் உன்னியூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ 135 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் .4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பலவீனமான கட்களுக்குதான் கூட்டணி தேவை என்றும், அதிமுக போன்ற பலமான கட்சிகளுக்கு கூட்டணி தேவையில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து, நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது என கூறினார். அதிமுக-தினகரனுடன் கூட்டணி என்பது வதந்தி என கூறிய அவர், திமுகவுடன் தினரகரன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு செய்யப்போகிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வருகை தந்தார்.மேலும் அவருடன் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர்.இதனால் போயஸ் தோட்டத்தைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
சென்னை ஆர்கே நகர்; தொகுதிக்கு நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் வரலாற்றிலேயே மறக்க முடியாத தேர்தலாக அமைந்துவிட்டது. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர்க கரு. நாகராஜனை விட அதிக வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் கூறியுள்ளார்… sources;dinasuvadu.com