மஞ்சுவிரட்டில் குழந்தையுடன் குறுக்கே வந்த தாயை பாயாமல் தாண்டி ஓடிய முரட்டு காளை. வியக்கவைக்கும் உண்மை சம்பவம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அருகே உள்ள சிராவயல் என்ற ஊரில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு அந்த ஊரின் சார்பாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டை காண அப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக தங்களது குழந்தைகளுடன் வருவது வழக்கம். இங்கு மஞ்சுவிரட்டு என்பது ஜல்லிகட்டை போல் வாடி அமைத்து காளைகள் அவிழ்த்துவிடப்படாது. இங்கு வயல் வெளி அல்லது வெட்ட […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம். நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 5,575 மையங்களில் சுமார் 16,29,865 போட்டியாளர்கள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் […]
தமிழகத்திற்க்கு மத்திய அரசின் புதிய விருது. பிரதமரிடம் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் விருதை பெற்றார். தமிழகத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சாதனை படைக்கும் மாநிலங்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ‘க்ரிஷி கர்மாண்’ என்ற விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், இதற்க்கு முந்தைய சாகுபடியில், எண்ணெய் வித்துகள் சாகுபடியில் சிறந்த சாதனை படைத்ததற்காக, தமிழகத்திற்கு, […]
நேற்று துப்புரவு பணியாளர் இன்று ஊராட்சி மன்ற தலைவர். மனம் மகிழவைக்கும் மகத்தான சம்பவம். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி. சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை […]
சென்னை மெட்ரோ ரயிலில் சிக்கி உயிரிழக்கும் வண்ணத்து பூச்சிகள். மணு கொடுத்த உடன் நடவடிக்கை என முதல்வர் உறுதி. நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகளின் உருவாக்கத்தாலும் சாலை மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வைத் தொலைப்பது மனிதர்கள் மட்டுமல்ல… இப்பூவுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்க்கும் உணவு சங்கிலிக்கும் ஊன்றுகோலாக இருக்கக் கூடிய சின்னச் சின்ன உயிரினங்களும் தான்.சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மார்க் க்ரிகோரியஸ், கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசியராகப் பணிபுரிந்து வருகிறார். தினமும் […]
சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள முண்டியம்மன்நகர் 7ம் வகுப்பு மாணவன் சுவருக்கு இடையில் சிக்கி தவிப்பு. 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர் சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள முண்டியம்மன்நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் நித்தீஷ் (12 வயது) தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.இந்நிலையில் நேற்று இரவு நித்தீஷ் வீட்டு அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த சுற்றுச்சுவருக்கும், அதனை […]
கோழிக்கோடு அருகே நாகர்கோவில் முதல் மங்களூர் வரை செல்லும் பரசுராம் விரைவு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்ட விவகாரம் காரணமா என காவல்துறை ஆய்வு. நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி பரசுராம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணி அளவில் மங்களூரை அடையும்.இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மங்களூருக்கு […]
இந்தியாவில் அறிமுகமான குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸ் நுழைந்துள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு குறல் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு எதிராக சென்னை பல்கலைகழக மாணவர்கள் காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் […]
தமிழகத்தில் தற்போது விளைநிலங்களில் ஏற்கனவே கெயில் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலை பல்வேறு மக்கள் போராட்டத்திற்க்கு பின் மூடு விழா கண்டது.அதற்கு மாற்றாக தற்போது அரசு இந்த அனுமதியை அளித்திருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.இந்த நிறுவனம் ஆய்வு நடத்துவதற்கு திமுக […]
தற்போது வரை தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விரும்பத்தகாத சம்பவமாக பொன்பரப்பி சம்பவம் இருந்து வருகிறது.இந்த சம்பவம் சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை சின்னத்தை பாட்டாளி மக்கள் கட்சி உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில் பேட்டியளித்த அந்த குழு ,அவர்கள் பெண்களை தரக்குறைவாக பேசியதுடன் பாமக தரப்பு வீடுகளை திட்டமிட்டே […]
ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் ஐங்கரன் இந்த படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவிஅரசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளார். ‘ஐங்கரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்தப் படத்தில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும் ராஜா முகமது படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.’ஈட்டி’ படத்தில் ஸ்போர்ட்ஸோடு ஆக்ஷனையும் கலந்துகட்டிய இயக்குநர், இந்தப் படத்தில் இன்ஜினீயரிங்கில் ஆக்ஷனை சேர்த்திருக்கிறார் இயக்குநர். DINASUVADU
நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும் இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம்மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். DINASUVADU
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கத்தில் இருந்து 23 பேர் டிராவல்ஸ் வேனில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அந்த வேனும் அவருக்கு சொந்தமானதாகும். இன்று அதிகாலை வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை நெருங்கியது. பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பினர். பின்னர் அங்கிருந்து வேன் கிளம்பியது. அருகில் உள்ள மேம்பாலத்தில் வேன் ஏறியது. அப்போது முன்னால் சென்று […]
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.1485 லட்சம் மதிப்பில் கொடைக்கானல் ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் […]