டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், போன்ற இடங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா […]