சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்து மீது நாகைப்பட்டினம் அருகே உள்ள சீர்காழி புறவழிச்சாலையில் கல்வீச்சு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே. ரமேஷ் என்பவரின் முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு…. அரசு, தொழிலாளர்கள் என இரு தரப்பையும் பார்க்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் கவலை . இதனால் பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .. நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க […]