சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீர்மானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 133 இடங்கள் மற்றும் ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது, அங்கு […]
சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்னதாக மறுத்துவிட்ட நிலையில்,இது தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற […]
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டுப்பாடு […]
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்க்குள் நிறைவடைந்துவிடும். இதனால் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும் என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என கூறியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி […]
உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் டிடிவின் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற […]