MK Stalin: தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். READ MORE – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.! அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் […]
கடந்த திங்கள் கிழமை பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் கூடியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் ஆளுநர் உரை, அடுத்த இரண்டு நாள் விவாதம் , அதற்கடுத்து இன்று முதல்வர் பதிலுரை என பட்டியலிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி..! முன்னதாக திங்களன்று ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையை வாசிக்க்காமல், அதனை வாசிக்க தனக்கு […]
ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை நேற்று இரவு கைது செய்தனர். முன்னதாக முதற்கட்ட விசாரணைக்கு நேரில் ஆஜரான சோரன், அடுத்து அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்ட் மாநில ஆளுநரிடம தனது ராஜினாமா கடிதத்தை […]
மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை […]
சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (இரண்டாவது நாள்) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. கடந்த 2 நாள் மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் உடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் மாநாட்டில் இதுவரை பல்வேறு நிறுவனங்களுடன் 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படும். ஆனால், ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டும், பல்வேறு மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியும் வந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் வைத்துள்ளார். அதனால், மசோதாக்களுக்கு […]
சென்னை புறநகர் செல்ல வேண்டுமாயினும், தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு செல்ல வேண்டுமாயினும் சென்னை மக்கள் கோயம்பேடு பெருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை தான் இருந்தது. இதனால் அப்பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வண்டலூரை அடுத்த கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையாயத்தை கட்டி முடித்துள்ளது. அயோத்தியில் பிரதமர் மோடி.! ரூ.15,700 கோடிக்கு திட்டங்கள்.. புத்தம புது ஏர்போர்ட்.. ரயில் நிலையம்… 393.74 கோடிரூபாய் செலவீட்டில், 59.86 […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்ததும், தேமுதிக தொண்டர்கள் , ரசிகர்கள் என பலர் தனியார் மருத்துவமனையிலும், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல் செய்தியை வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த் மறைவுக்கு சாலிகிராமத்தில் உள்ள […]
சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி ஒழிப்புக்காக கடுமையாக போராடிய சமூக நீதிப் போராளியாகும் விளங்கும் மறைந்த தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி! முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கீ.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர், தி.க திடலில் இருந்து அமைதி ஊர்வலமாக அண்ணா […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையானது வழக்கு பதிவு செய்து இருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முன்னதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நிரபராதி என தீர்ப்பளித்து இருந்த நிலையில், நேற்று அந்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை […]