தமிழ்நாட்டில் இனி அனைத்து ஊர்களையும் தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே உச்சரிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல ஊர்களை தமிழில் ஒரு பெயரும், ஆங்கிலத்தில் ஒரு பெயரும் இருந்து வந்தது. உதாரணமாக சென்னை எழும்பூரை ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் எக்மோர் (EGMORE) என குறிப்பிடுவது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றி இனி சென்னை எழும்பூர் (EGMORE இல்லை Ezhumboor ) என்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி எழும்பூர் (Ezhumboor) எக்மோர்(Egmore) […]