அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசு முன்னறிவிப்பின்றி அரசு பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதாகவும்,அரசின் இந்த முடிவால் தமிழக மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் பல இடங்களில் பேருந்து ஓட வில்லை. இதனால் பெரிதான அளவில் பாதிக்க படும் மக்கள் நாய் வண்டியில் ஏறி செல்கின்றது அதிர்ச்சியை தருகிறது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள் கோயம்பேட்டிற்கு நாய் வண்டி என்று கூட பார்க்கலாம் கட்டணம் கட்டி செல்கிறார்கள். இதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் […]
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் 58 பேருந்துகளும், குரோம்பேட்டையிலிருந்து செல்லும் 200 பேருந்துகளில் வெறும் 45 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்,ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வேண்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டும், தனியார் ஊழியர்களை கொண்டும் குறைந்தபட்ச பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னையில் தனியார் ஐடி நிறுவன பேருந்துகளை கொண்டு அரசு மக்களுக்கு இலவசமாக பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான வழக்கில் ‘வேலை நிறுத்தத்தில் […]
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை போக்குவரத்த்து கழகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மக்களின் நலன் கருதி தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் தேவை என்றும், கனரக ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வைத்துள்ளோர் சான்றிதழ்களுடன் மாநகர் போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளரை அணுகுமாறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல், திருச்சியிலும் தினக்கூலியாக ஒட்டுநர் நடத்துநர் தேவை என திருச்சி மத்திய […]