சென்னை : மும்பையை சேர்ந்த திரைப்பட நிறுவனத்திற்கு ரூ.1.60 கோடி பணத்தை திருப்பி செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணத்தை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என கங்குவா பட நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், […]
சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Annamalai: அண்ணாமலை, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு. 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக […]
Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை இன்று நடைபெற்றது. அதே போல பெங்களூரில் நடைபெற்ற சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த […]
Satyaprata Sahu: தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ல் நடைபெறுகிறது. Read More – Elections2024 : தேர்தல் அட்டவணை அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு […]
Jyothi Nirmalasamy: தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். […]
DK Sivakumar: பெங்களூருவில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறப்பதாக இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி […]
R.N.Ravi: மனுதர்மத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர் எனவும் வரலாறு தெரியாமல் வாய் திறக்கக் கூடாது என்றும் ஆளுநர் ரவி பேசியதற்கு அய்யா வழி தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் 192 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பேசினார். அவர் பேசும் போது, “அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே […]
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். அதன்படி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் […]
அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியை செய்து வருகிறார். 31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு வரை […]
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரிம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 […]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தார். அங்கு அவர் பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு […]
நேற்று சென்னைக்கு வருகை தந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை தந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்ட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இன்று கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 12 மாவட்டங்களில் இன்று கனமழை.! வானிலை ஆய்வு […]
தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் என்ற முடிவில், மக்களுக்கு பொருட்கள் […]
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ‘ஆரஞ்ச்’ நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதையடுத்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு முதல், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், இன்று காலை முதல் சென்னையின் எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு கனமழை வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, […]
தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்த கூடாது என்று கூறியுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கான செலவின […]