இந்த பதவி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள். ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. விருப்ப பாடங்களின் வினாத்தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி, சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் குற்றவியல் படத்திற்கு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும் என கூறியுள்ளது. […]