அமெரிக்க கண்டத்தின் கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல்மதம் 24ம் நாள் பிறந்தவர். இவரது தந்தை ஒரு வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் நங்கு பயின்ற பிறகு,தனது சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். இவர் தமிழகம் வர கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.பின் இவர்,, தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயராகியோரிடம் தமிழ் இலக்கண, […]