தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,கடந்த 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை) அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது : “உலகில் சுமார் 94 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.அந்நாடுகளில் அவர்கள் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன.இதனால்,கற்பதற்கான வசதிகள் இல்லாமை,தமிழறிந்த ஆசிரியர்கள் இல்லாமை, தேவையான தமிழ்ப் பாடநூல்கள் […]