நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சுற்றுலாத்துறை குறித்து தகவல் ஒன்றை தெரிவித்தது.அந்த தகவலில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12.1% அதிகரித்துள்ளது . 2017-ம் ஆண்டு 15.55 மில்லியனாக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 2018-ம் ஆண்டு 17.42 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.