மத்திய அரசின் பணியாளர் நலத்துறை சார்பில் நடத்திய ஆய்வில், சிறிய மாநிலங்களில் நிர்வாகம், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் முதல் இடங்களை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி புதுவை ஆளுநர் மற்றும் மத்திய அரசை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் என்ற கண்ணியத்தை இழந்து எல்லை மீறி பேசுவதாகவும், அதனை மாற்றிக்கொள்ள வேண்டுமெனக்கூறி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக மின்னஞ்சல் […]