திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்களும் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியானது என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் அரசு வேலை,பதவி உயர்வுக்கு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பதவி உயர்வுக்கு செல்லுபடியாகுமா?: “வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி செந்தில்குமார் 1996 இல் எஸ்எஸ்எல்சி மற்றும் […]