சென்னை : பல் மருத்துவம் என்பது பொதுவாகவே நகர்புறங்கள் சுற்றியே பெரும்பாலும் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட நகராட்சி பகுதிகளில் தான் பெரும்பாலான இடங்களில் பல் மருத்துவப் பிரிவு உள்ளது. பல் மருத்துவம் என்பது தற்போதைய காலகட்டத்தில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேருக்கு வாய் சார்ந்த மருத்துவ பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலை கருத்தில் கொண்டு முன்னதாக தமிழக சுகாதாரத்துறை […]
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பணியாற்றும் மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் நோயாளிகளும் புரியும் வகையில் தெளிவாக Capital Letters-இல் (பெரிய எழுத்தில்) தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்துச்சீட்டில் இருக்கும் எழுத்துக்கள் புரியாத வகையில் இருப்பதாக பல […]
தமிழகத்தில் செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் கருமுட்டை சேமிப்புக்கு 50,000 ரூபாயும், கருமுட்டையை செலுத்த 50,000 ரூபாயும், வாடகை தாய் பதிவு கட்டணமாக 2 லட்சம் ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை கண்டறிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய பதிவு கட்டணங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து செயற்கை கருத்தரிப்பு […]
நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளதாகவும், பரிசோதனைகளும் இங்குதான் அதிகமாக செய்யப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. அங்கு தினந்தோறும் ஒரு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அனைத்து அரசு […]