தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது-முதலமைச்சர் பழனிசாமி

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில்  முதலமைச்சர் பழனிசாமி பேசினார் .அவர் பேசுகையில், மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்று  முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடக்கம் ! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்தார்.மேலும்  அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அவர் சென்னை சென்றார். தற்போது அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி … Read more