தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.அந்த வகையில்,பொதுப் பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டு,அத்துறையின் அமைச்சராக துரைமுருகன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அதன்படி,அணைகள்,ஆறுகள்,ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களின் வளத்தை பெருக்கும் பணிகள் நீர்வளத்துறையின் கீழ் வருகின்றன. இந்நிலையில்,முதல்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப் பேரவையில் […]
தமிழக சட்டபேரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது என்று சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் […]
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வேளாண் மண்டல மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா மாவட்டங்களை […]