தனியார் உரக்கடைகள் பிற உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் உரக்கடை உரிமையாளர்கள் யாரும் விவசாயிகள் கேட்காத உரங்களை வாங்க நிர்பந்திக்கக்கூடாது,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,இது தொடர்பாக வேளாண்மை-உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சம்பா (இராபி) பருவத்தில் 13.747 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி […]