சென்னை : தமிழக சட்டப்பேரவை 2ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று, மதுரை டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு திட்டத்திற்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களும், முதலமைச்சரும் பதில் அளித்து வருகின்றனர். அதன்படி, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பற்றி பேசியிருந்தார். […]