இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவ.27ம் தேதி அந்நாட்டு தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நவ.27ம் தேதி 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், […]