சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14-ம் தேதி முதல் ஜன 19-ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வாசிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் இல்லத்திற்கு போட்டிப்போட்டு கொண்டு […]
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, பரனூர், பெருங்களத்தூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், பெருங்களத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நேற்று காணும் பொங்கல் என்பதால், அதையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதால் சென்னை தாம்பரத்தில் கடும் போக்குவரத்து […]
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் […]
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை […]
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டள்ளது. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் மாற்று அட்டவனைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அங்கங்கே பெய்து வரும் வேளையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 17 வரையில் […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என […]
சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4 இல் தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை – தாம்பரம் இடையே நவ.3 ஆம் தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவ.4 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை – தாம்பரம் இடையேவும், மறு மார்க்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 […]
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சொல்லப்போனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என இந்த ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். இந்த சுழலில் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் ரத்து செய்யப்படுவது வழக்கம். […]
சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை […]
சென்னை: நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை , தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள், தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலைத்தில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வரும் 55 மின்சார ரயில்கள் மேற்கண்ட காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே […]
சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் அவர்களை இடமாற்றம் செய்து புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமாரை தமிழக அரசு நியமனம் செய்தது. அமுதா ஐஏஎஸ் உட்பட தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 10 புதிய மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்… ராணிப்பேட்டை ஆட்சியராக J.U.சந்திரலேகா […]
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் வழங்கியுள்ளனர். இதுகுறித்து KPY பாலா பேசுகையில், “2015-ல் வெள்ளம் வந்தபோது உதவி செய்ய வேண்டும் என்ற […]
தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னரில் உள்ள 98 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 7 பேர் கொண்ட கும்பல் தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு துறைமுகம் வாயிலாக கண்டெய்னர் மூலம் பொருட்கள் அனுப்பப்படும். அப்படி, தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக கண்டெய்னர் பெட்டியில், மருந்து பொருட்கள் இருந்துள்ளன. இந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை கூட உடைக்காமல், நூதனமாக அதனுக்குள்ளே இருந்த 98 […]
தாம்பரம்:மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனையடுத்து,மீண்டும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி […]
தமிழகத்தின் 20 மாநகராட்சியாக தாம்பரத்தை அறிவித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் என அனைத்தையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டம் மூலமாக தாம்பரம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக உருவாகியுள்ளது.
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல்துறை ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவடி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், மாநகர காவல் ஆணையராக சிறப்பு அதிகாரிகள் […]
தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்கு தாம்பரம் நுழைவு வாயில் அருகே மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை. தனியார் கல்லூரியில் படித்து வரும் 22 வயதான ஸ்வேதா என்பவர் அவரின் ஆன் நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இருவரும் அங்கு ரத்த […]
தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தாம்பரம்,பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 16 வது மாநகராட்சியாக உருவாகிறது தாம்பரம் மாநகராட்சி. அதேபோல, காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணங்கள் […]