அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலைய வெளியே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. காபூலில் மீண்டும் ஐஎஸ்ஐஸ்-கே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கமளிக்க இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் […]
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் வேலைக்கு செல்லும் பெண்களை பல இடங்களில் தடுத்து வருவதாக தகவல். ஆப்கானிஸ்தானை, தலிபான் அமைப்பினர் முழுமையாக கைப்பற்றியுள்ள விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானை வைத்தியிருந்தது. அப்போது, பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டனர். பெண்கள் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், போர் முடிவுக்கு வந்ததாகவும், […]
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல். ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில், ஆப்கான் நாட்டு தேசிய கொடியை கையில் எடுத்து மக்கள் கொண்டாடியதால் தலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறப்படுகிறது. Taliban soldiers did fire to disperse the crowds in Jalalabad […]
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை நடத்த உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது மற்றும் அந்நாட்டு நிலவரம் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ஆப்கானிஸ்தானில் மேலும் 1,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, தலிபான்கள் உற்சாகமாக குழந்தைகள் போல் விளையாடிய வரும் காட்சி இணையத்தில் வைரல். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி இருந்த நிலையில், நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானுக்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதே சமயத்தில், இடைக்கால ஆப்கன் […]
விமானத்தின் சக்கரத்தை பிடித்து பயணித்த 3 பேர் பறக்கும் விமானத்தில் இருந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து உயிரிழப்பு. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!! ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் மக்கள் குவிந்ததால், கூட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்பும் என தகவல். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, இன்று மாலை 7 முதல் 8 மணிக்குள் அந்த விமானம் டெல்லி வந்துவிடும் என கூறப்படுகிறது. விமானத்தில் அனைத்து இருக்கைகளையும் நிரப்பப்பட்டு, முடிந்தவரை எத்தனை […]