Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை 5.08 மணியளவில் கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவானது. இதனால் தலைநகர் தைபேயில் சில கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தீவின் வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக […]
The GOAT: நடிகர் பிரபுதேவா பிறந்த தினத்தை முன்னிட்டு ‘THE GREATEST OF ALL TIME’ படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினம் இன்று. இவர் டான்ஸ் மாஸ்டர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறைமை கொண்டவர். தற்பொழுது, நடிகர் விஜய்யின் ‘The GOAT’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘The GOAT’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் […]
சீனாவின் ஆதிக்கத்தில் இருந்துகொண்டு தனி நாடாக அங்கீகரிக்க தவித்து வரும் தைவானில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் 14 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்து உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிரதான நாடுகள் கூட தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும், அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக கைவானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கி வருகிறது. காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் […]
தைவானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, 6.8 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவானின் தென்கிழக்கு கடற்கரை பகுதியான டைடுங் நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ரயில்கள் தடம் புரண்டன, மேலும் டைடுங் நகரின் ஒரு கடை இடிந்து விழுந்துள்ளது. தைவானின் மீட்புக்குழுவினர் தெரிவித்த தகவலில், ஒருவர் உயிரிழந்ததாகவும் 146 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், […]
சீன ராணுவ ஜெட் விமானம், தைவான் வான்வழி எல்லையை கடந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும், ஆசிய நாடுகளின் அமெரிக்க பிரதிநிதியாகவும், இருக்கும் நான்சி பெலோசி தைவான் வருகையை அடுத்து சீனா தைவான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. நான்சி பெலோசி வருகையின் போதே, போர் விமானங்கள், போர் கப்பல்களை நிறுத்தி பயமுறுத்தியது சீனா. தைவானை சுற்றியுள்ள சீன எல்லையில் தீவிர ராணுவ பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு […]
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி, தைவானை சுற்றி அருகில் உள்ள சீன பகுதிகளில் 21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார். தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என […]
கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை. ஜப்பான் நாட்டில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் யோனாகுனி என்ற நகரத்தில் இருந்து தென் மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, கிழக்கு தைவானுக்கும் தென்மேற்கு ஜப்பானுக்கும் இடையில் இன்று ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆனால் […]
தைவான் நாட்டில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டிற்கு விமானம் வழியாக அழைத்து சென்றுள்ளனர். தைவான் நாட்டின் உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் வாழ்ந்து வருகிறது. என்மா என்ற பெயருடைய இந்த பெண் காண்டாமிருகத்திற்கு 5 வயது ஆகிறது. ஆனால், இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கம் செய்வதற்கு அங்கு ஆண் காண்டாமிருகம் இல்லை. இதன் காரணத்தால் இந்த விலங்கினத்தை காப்பாற்றும் முயற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு […]
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா […]
தைவான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் லட்சக் கணக்கில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஒரு புறமிருக்க நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் தைவான் துணை நிற்கிறது என்று அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினந்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா 2வது […]
சாலை விபத்துக்கு பின் 62 நாட்கள் கோமா நிலையில் இருந்த 18 வயது இளைஞனுக்கு பிடித்த உணவான “சிக்கன் ஃபில்லட்” சொற்களைக் உறவினர்கள் சொன்னதும் திடீரென எழுந்துவிட்டார். இந்த சம்பவம் தைவானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞன் தனது ஸ்கூட்டரில் ரரைடு செய்யும் போது விபத்து ஏற்பட்டதால் ஆறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்ததால் அவர் ஆழ்ந்த கோமாவில் சென்றுள்ளார். இதனையடுத்து , அவரது கோமாவின் […]
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு நீடிக்கும் மத்தியில் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உட்பட மூன்று ஆயுத அமைப்புகளை கொண்ட ஆயுதங்களை தைவானுக்கு விற்க ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த புதன்கிழமை அறிவித்தது. மேலும், 135 துல்லியமான நில-தாக்குதல் ஏவுகணைகள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் தைவானுக்கு அதன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி அளிக்க ஒப்புதல் […]
சீனாவிற்கு கிழக்கு பக்கத்தில் தென் சீன கடல் எல்லையில் உள்ள குட்டி தீவான தைவான் தனி நாடக உள்ளது. ஆனால், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இந்நிலையில், தைவானில் சீன சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ படி போர் விமானம் கிராமப்புற குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள திறந்த பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. விபத்து எவ்வாறு […]
தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது. இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது. Here’s the moment the bridge collapsed. Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV — Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019 தகவல் அறிந்து […]
வண்ண மையமாக தைவானில் தொடங்கியுள்ள விளக்கு திருவிழாவால் அங்குள்ள கிராமங்கள் காட்சியளிக்கின்றன.கிராம மக்கள் சற்று தொலைவில் உள்ள உறவினர்களுக்கு தாங்கள் நலமாக இருப்பதை உணர்த்தும் விதமாக வானில் வண்ண விளக்குகள் பறக்க விடுவது பாரம்பரிய வழக்கம். அனைவரின் நலமாக வாழ பிரார்த்தனை செய்தும் விளக்குகளை பறக்க விடு வதுண்டு. விளக்கு திருவிழா, சீனப்புத்தாண்டு பிறந்து 15 நாட்களுக்கு பிறக்கு கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் தைவானில் உள்ள பிங்சி ( pingxi ) மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் வண்ண […]
நில நடுக்கத்தில் தைவானில் கட்டிடங்கள் அடியோடு சாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 247 பேர் காயம் அடைந்தனர். 88 பேரைக் காணவில்லை. தைவானின் கிழக்கு கடற்கரை நகரான ஹூலியனில் நேற்றிரவு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெல்மெட் கடையில் இருந்து ஒரு இளம் பெண் தனது செல்ல வளர்ப்புக் கிளியுடன் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் பல அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதி இடிந்து […]
நேற்று இரவு தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. ரிக்டர் அளவு கோலில் ஆறு புள்ளி நான்கு ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. பொதுமக்கள் பயத்தின் காரணமாக வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஹுவாலியன் ராணுவ மருத்துவமனை சேதமடைந்ததால் மடைந்ததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.