தமிழ்நாட்டுக்கு வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என டி.ஆர்.பாலு தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினேன். ஜூன் மாதத்தில் கூடுதலாக வழங்கவேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு அளித்த அனைத்து […]
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் தொகுதி பங்கீடு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் […]
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுதினார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீட் […]
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு 3,842 மையங்களில் 11 மொழிகளில் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர். நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நாளை திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், இந்த போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெறும் எனவும், […]