டி. பி. ராஜலட்சுமி தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகே உள்ள சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகிய தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ராஜலட்சுமி.தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு இருந்தார். ராஜலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும்போதே திருமணமாகி விட்டது.பின்னர் வரதட்சணைக் கொடுமை காரணமாக பிறந்த வீட்டுக்கே வந்து விட்டார் ராஜலட்சுமி.இதை தொடர்ந்து ராஜலட்சுமி தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் ,வறுமையுடன் திருச்சி வந்தார். நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்ததும் . திருச்சியில் […]