தமிழகத்தில் இன்னும் பாஜக காலூன்றவில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார். மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று […]
ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுஜித் மீட்பு பணி குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான், அரசியல் செய்வதற்கு இல்லை. 4 நாட்களாக ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்ததே அரசியல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.ஆனால் அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றதால்தான் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார் என்று தெரிவித்தார்.
திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த இளங்கோவன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டு இது நாள் வரை செயல்பட்டு வந்த டி.கே.எஸ்.இளங்கோவன் திடீரென்று அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிவித்த திமுக தலைமை திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். DINASUVADU