முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகிய ஆதிச்சநல்லூரில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில், முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், கட்டிடங்கள் அவர்களின் எலும்புக்கூடுகள் என பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் எலும்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது.