நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் […]
பதவிகாலம் முடிந்தும் சின்னம் பயன்பாடுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடிந்த பின்பும் எம்பிக்கள், அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசின் கடைநிலை ஊழியர்கள் கூட சின்னங்களை பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என்று கருணாஸ் MLA தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி குறித்து, திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய கருணாஸ், எங்கள் கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல, அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. பாமக 20% இட ஒதுக்கீடு கேட்பது […]