கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி. நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக்கூடாது என்றும் நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக நடத்தப்படும் கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். நிலையில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், […]
கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் […]
உதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு. அதிகாரிகள் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், சென்னை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை செயல்படுத்தாத காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை […]
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அரசு சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி எச்சரிக்கை. மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சரகள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம் லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் […]
போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை […]
சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் குற்றம் நடைபெறாமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழகத்தின் 30-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிபியாக பதவியேற்றதில் மகிழ்ச்சி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அரிய சந்தர்ப்பம். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். மனித […]